NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
TrumpFebruaryHealthSafetyFireProtestsTariffNewsMilitaryCrisisPolicyStrikesLaunchCampaignDigestSundayTimelineRefundsGovernmentPublicHospitalPrisonersReferralTargets
TrumpFebruaryHealthSafetyFireProtestsTariffNewsMilitaryCrisisPolicyStrikesLaunchCampaignDigestSundayTimelineRefundsGovernmentPublicHospitalPrisonersReferralTargets
All Articles
Read all Latest Updates on and about தேர்தல் தேதி அறிவிப்பு
maalaimalar.com
Published 5 days ago

Read all Latest Updates on and about தேர்தல் தேதி அறிவிப்பு

maalaimalar.com · Feb 18, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260218T054500Z

Full Article

பாராளுமன்றத்தில் மக்களவை, மேல்சபை என 2 அவைகள் உள்ளன. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மக்களவை எம்.பி. ஆகிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் மூலம் மேல்சபை எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.மேல்சபை எம்.பி.க்களின் (மாநிலங்களவை) பதவிகாலம் 6 ஆண்டுகள் ஆகும். 10 மாநிலங்களில் உள்ள 37 உறுப்பினர்களின் பதவி காலம் முடிவடைகிறது.இந்தநிலையில் காலியாகும் 37 மேல்சபை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது.தமிழ்நாடு, மராட்டியம், மேற்குவங்காளம், ஒடிசா, அசாம், பீகார், சத்தீஸ்கர், அரியானா, இமாச்சலபிரதேசம், தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 37 இடங்களுக்கான மேல்சபை தேர்தல் அடுத்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி நடை பெறுகிறது.தமிழ்நாட்டில் 6 எம்.பி.க்கள் இடம் காலியாகுகிறது.தி.மு.க.வை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, பி.செல்வ ராசு, திருச்சி சிவா, டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோரது பதவி காலமும், அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.தம்பிதுரை, மற்றும் அ.தி.மு.க. சார்பில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவி காலமும் ஏப்ரல் 2-ந்தேதி முடிவடைகிறது. இந்த 6 மேல்சபை எம்.பி. இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.தமிழ்நாட்டில் காலியாகும் 6 மேல்சபை எம்.பி.க்களுக்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. மார்ச் 5-ந்தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை 6-ந்தேதி நடக்கிறது. மார்ச் 9-ந்தேதி மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும்.போட்டி இருந்தால் தேர்தல் நடைபெறும். மார்ச் 16-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும். இந்த தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மார்ச் 20-ந்தேதி முடிவடையும்.மாராட்டியம் மாநிலத்தில் 7 மேல்சபை எம்.பி.க்கள், ஒடிசாவில் 4 உறுப்பினர்கள், மேற்கு வங்காளத்தில் 5 எம்.பி.க்கள் ஆகியோரின் பதவி காலமும் ஏப்ரல் 2-ந்தேதி முடிவடைகிறது.அசாம் (3), பீகார் (5), சத்தீஸ்கர் (2), அரியானா (2), இமாச்சலபிரதேசம் (1), தெலுங்கானா (2) ஆகிய மாநிலங்களில் உள்ள மேல்சபை எம்.பி.க்களின் பதவி காலம் ஏப்ரல் 9-ந்தேதி முடிவடைகிறது.இந்த 9 மாநிலங்களில் காலியாகும் 31 மேல்சபை எம்.பி.க்களின் தேர்தலும் மார்ச் 16-ந்தேதி நடக்கிறது.


Share this story

Read Original at maalaimalar.com

Related Articles

maalaimalar.com1 day ago
கூட்டணியில் தே . மு . தி . க . இணைந்தது எங்களுக்கு கூடுதல் பலம் - வைகோ - Vaiko Says joining of the DMK in the alliance is an additional strength for us

Published: 20260221T074500Z

maalaimalar.com3 days ago
Read all Latest Updates on and about Sims Hospital

Published: 20260219T131500Z

maalaimalar.com3 days ago
India first integrated sleep center launched at SIMS Hospital ! - சிம்ஸ் மருத்துவமனையில் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த தூக்கவியல் மையம் தொடக்கம் !

Published: 20260219T131500Z

maalaimalar.com3 days ago
Where does the money come from to provide freebies ? What kind of culture is this ? - Supreme Court questions state கோவர்ன்மெண்ட்ஸ் - இலவசங்களை வழங்க எங்கிருந்து பணம் வருகிறது ? என்ன மாதிரியான கலாச்சாரம் இது ?

Published: 20260219T100000Z

maalaimalar.com6 days ago
சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் - புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு , Interim budget to be presented in the Assembly today

Published: 20260217T023000Z

maalaimalar.com7 days ago
சபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரம் - மறுஆய்வு மனுக்கள் நாளை சுப்ரீம் கோர்ட்டில் பரிசீலனை - issue of women entry into Sabarimala

Published: 20260215T084500Z