
vikatan.com · Mar 2, 2026 · Collected from GDELT
Published: 20260302T054500Z
கேரளாவின் பெயர் மாற்றம் கலாசார - மொழி சார்ந்த சீரமைப்பாகப் பார்க்கப்படுகிறது. மேற்கு வங்காளத்தின் கோரிக்கையோ, அரசியல் ரீதியாக சிக்கலாகவே நீடிக்கிறது. Published:Today at 6 AMUpdated:Today at 6 AMபிரீமியம் ஸ்டோரிகேரளம்கேரள மாநிலத்தின் பெயரை `கேரளம்' என்று மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களே உள்ள நிலையில் கிடைத்துள்ள இந்த ஒப்புதல், மத்திய பா.ஜ.க அரசின் ஓட்டு அரசியலாகவும் பார்க்கப்படுகிறது. அதே சமயம், மேற்கு வங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற அம்மாநிலத்தின் கோரிக்கை, 2011 முதல் எந்தப் பரிசீலனையும் இல்லாமல் கிடப்பதன் பின்னாலும் அரசியல் உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.2023-ல் தீர்மானம், 2026-ல் ஒப்புதல்!கேரளா மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற, இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சியின் தலைமையிலான அரசு, 2023-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது. முதல்வர் பினராயி விஜயன் அந்த தீர்மானத்தில், `நம் மாநிலத்தின் பெயர் மலையாள மொழியில் கேரளம். மொழி அடிப்படையில் நம் மாநிலம் 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி உருவானது. ஆனால், அரசியல் அமைப்பின் முதல் பட்டியலில் நம் மாநிலத்தின் பெயர் கேரளா எனக் குறிப்பிடப்பட்டது. எனவே, அரசியலமைப்பின் 3-வது பிரிவின் கீழ் கேரளம் எனத் திருத்தம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை இந்த பேரவை ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது. அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் நமது மாநிலத்தை கேரளம் என்று மாற்ற வேண்டும்’ எனத் தீர்மானத்தை முன்மொழிந்தார்.அவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு ஜூன் மாதமும் இதே தீர்மானம் கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில்தான், கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, மத்திய அமைச்சரவை கேரளாவை கேரளம் எனப் பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலுடன் மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்தப் பெயர் மாற்ற மசோதா சமர்ப்பிக்கப்படும். அது சட்டமாக மாறினால், மாநிலம் தொடர்பான மத்திய அரசு ஆவணங்களில் ‘கேரளா’ என்பது ‘கேரளம்’ என மாறும். சட்டசபை தேர்தலுக்கு முன்பு கேரளா என்பது கேரளம் என மாறிவிடும். ஆனாலும், தேர்தல் முடிந்து புதிய அரசு வந்த பிறகே அனைத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து பிரதமர் மோடி, “கேரளம் என்ற பெயர் மாற்றத்துக்கான தீர்மானம் அம்மாநில மக்களின் விருப்ப சக்தியை பிரதிபலிக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.