NewsWorld
PredictionsDigestsScorecardTimelinesArticles
NewsWorld
HomePredictionsDigestsScorecardTimelinesArticlesWorldTechnologyPoliticsBusiness
AI-powered predictive news aggregation© 2026 NewsWorld. All rights reserved.
Trending
StrikesIranMilitaryDaysStatesFebruaryNewsTimelineYearsTariffCrisisSecurityAttacksTargetsDailyDigestTrump'sEmbassyTensionsWesternIsraelTuesdayWarHeat
StrikesIranMilitaryDaysStatesFebruaryNewsTimelineYearsTariffCrisisSecurityAttacksTargetsDailyDigestTrump'sEmbassyTensionsWesternIsraelTuesdayWarHeat
All Articles
தீக்கதிர் - ஊருக்குத்தான் உபதேசமா ?
theekkathir.in
Published about 6 hours ago

தீக்கதிர் - ஊருக்குத்தான் உபதேசமா ?

theekkathir.in · Feb 24, 2026 · Collected from GDELT

Summary

Published: 20260224T004500Z

Full Article

ஊருக்குத்தான் உபதேசமா? பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று மனதின் குரல் என்ற பெயரில் உரையாற்றி வருகிறார். ஒவ்வொரு மாதமும் ஏராளமான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் அள்ளி விடுவது அவரது வழக்கம். அத்துடன் போலியான பிம் பத்தையும் அவர் உருவாக்கி தனக்குத்தானே பாராட்டி, கைதட்டிக் கொள்வார். பிப்ரவரி மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் புகழாரம் சூட்டியுள்ளார். ஜெயலலிதாவுடனான தனது ஒவ்வொரு சந்திப்பும், உரையாடலும் தனக்கு புத்துணர்ச்சி அளித்ததாக அவர் கூறியுள்ளார். 2014 மக்களவைத் தேர்தலின்போது, மோடி யின் குஜராத் மாடலை கடுமையாக விமர்சித்த வர் ஜெயலலிதா. குஜராத்தில் கடந்த பத்தாண்டு களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 65 சத வீதம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர் அந்தத் தேர்தலின்போது மோடியா, இந்த லேடியா என்று கேட்டதை மோடி வசதியாக மறந்துவிட்டார். அதுமட்டுமின்றி, பாஜகவுடன் தான் கூட்டணி வைத்துக் கொண்டது மிகப் பெரிய தவறு என்றும், இனிமேல் அந்த தவறை செய்யமாட்டேன் என்றும் ஜெயலலிதா கூறிய தையும் மறந்துவிட முடியாது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை பல துண்டுக ளாக நொறுக்கியது பாஜக. தற்போது மிரட்டி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமு கவை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், ஜெயலலி தாவை பிரதமர் மோடி பாராட்டுவது அரசியல் லாபத்திற்காக மட்டுமே. பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை போன்றவர்கள் ஜெயலலிதா ஊழல் குற்றச் சாட்டின் பேரில் சிறை சென்றதையும், பதவி இழந்ததையும் சுட்டிக்காட்டி அதிமுகவை விமர்சித்துள்ளனர். அண்ணாமலை போன்ற வர்கள் எம்ஜிஆரையும் கூட விட்டுவைக்க வில்லை. ஆனால் தமிழக மக்கள் இதை யெல்லாம் மறந்திருப்பார்கள் என்று மோடி கருதுகிறார் போலும். இந்த உரையில் கேரள மாநிலம் திருச்சூரில் ஒரே ஒரு வயலில் மட்டும் 570 ரக நெற்பயிர்கள் விளைவிக்கப்படுவது குறித்து பிரதமர் மோடி பெருமிதப்பட்டுள்ளார். ஆனால் இவரு டைய அரசு கொண்டு வரும் விதை மசோதா நடைமுறைக்கு வந்தால் இந்திய விவசாயி களின் பாரம்பரிய விதை உரிமை பறிபோகும் என்பதை அவர் மூடி மறைக்கிறார். உள்ளூர்ப் பொருட்களை வாங்குங்கள் என்றும் அவர் உபதேசம் செய்கிறார். அமெ ரிக்காவிலிருந்து வேளாண் விளை பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்து விட்டு உள்ளூர்ப் பொருட்க ளை வாங்குங்கள் என்று உபதேசிக்கிறார். ஊருக்குத்தான் உபதேசம் என்பது இவ ருக்குத்தான் முற்றிலும் பொருந்தும்.


Share this story

Read Original at theekkathir.in

Related Articles

Euronewsabout 1 hour ago
Would you ride in a driverless taxi? AI-powered robotaxis are being tested in London

Supporters of the tech argue that autonomous vehicles could help reduce accidents caused by human error, but London’s iconic black cab drivers remain sceptical.

Euronewsabout 1 hour ago
'Groundbreaking' model can calculate true impact of climate change and it’s bad news for Europe

Researchers have created a new mathematical solution to analyse how emission-intensive actors are responsible for increasing climate damage.

Euronewsabout 1 hour ago
Looking to book a multi-city break in Scandinavia? This new rail route will link Malmö to Oslo

This summer, rail operator Snälltåget will launch a daily daytime service between Sweden and Norway, with on-board dining and onward links to Berlin.

Euronewsabout 1 hour ago
From NASA to the rugby pitch: Could this new material make contact sport safer for young players?

The material stays soft and flexible during normal play but stiffens instantly on impact to absorb energy, potentially lowering the force transferred to the brain.

South China Morning Postabout 1 hour ago
World-leading EV motor expert joins Hong Kong PolyU after 38 years in Britain

Zhu Ziqiang, one of the world’s leading experts in electric motor engineering, has left his four-decade career in Britain to take up a full-time position at Hong Kong Polytechnic University. In his new role as chair professor of electrical machines and control systems, Zhu will continue his long-standing work on high-efficiency permanent magnet motors, according to his faculty page on the PolyU website. Zhu spent 38 years at the University of Sheffield, where he eventually established what was...

Euronewsabout 1 hour ago
What do Europeans think about taxing the rich and large multinational companies?

Euronews Business takes a closer look at what Europeans think about a minimum wealth tax on the richest individuals, and a minimum tax on large multinationals in the countries where they operate.